மணிக்கு 290 கி.மீ காற்றுடன் கரையை கடந்த பாவி புயல்
அமெரிக்காவில் சூப்பர் புயலாக உருமாறியிருந்த பாவி புயல் நேற்று கரையை கடந்துள்ளது.
இதன்போது குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் கடும் மழையை எதிர்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) வெளியிட்டுள்ள தகவலின்படி, மேற்படி புயலானது ரோட்டா தீவின் மீது நகர்ந்தபோது, மணிக்கு 290 கி.மீ (180 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடல் அலைகள் கிட்டத்தட்ட 11 மீட்டர் (35 அடி) உயரத்திற்கு எழுந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புயல் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
அதிகாரிகள் இன்று காலையில் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், மீட்பு பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாவிப் புயலானது இன்று பிலிப்பைன்ஸ் நோக்கி நகர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




