ஈரான் மற்றும் கத்தாருக்கு இடையேயான கடல்வழி வர்த்தகம் மீள ஆரம்பம்
ஈரான் மற்றும் கத்தாருக்கு இடையேயான கடல்வழி வர்த்தகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் வர்த்தகத் தூதர் அப்பாஸ் அப்தோல்கானி (Abbas Abdolkhani) நேற்று அறிவித்தார்.
தோஹாவில் உள்ள ஈரானிய தூதரகம் மற்றும் கத்தார் அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, ஈரானின் தயர் துறைமுகத்திற்கும் கத்தாரின் அல் ருவைஸ் துறைமுகத்திற்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புவியியல் ரீதியாக எதிரெதிராக அமைந்துள்ள இவ்விரு துறைமுகங்களும் முக்கியமாக பிராந்திய வர்த்தகத்திற்கு உதவுகின்றன. போரின் போது தயர் துறைமுகம் பலமுறை தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த மாதம் தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையே கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தின்படி நான்கு மாத கால மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், வளைகுடாவில் போருக்கு முந்தைய கடல்வழிப் போக்குவரத்து வழமைக்கு திரும்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வளைகுடாவிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் போக்குவரத்து இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.




