இலங்கை செய்தி

பதவி விலகுமாறு நீதி அமைச்சருக்கு அழுத்தம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தனக்கு பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த நிறுவனத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இச்சம்பவத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பதவியை விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று (06) வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் சுமார் 600 கைதிகளை மாத்திரமே தடுத்து வைக்க முடியும். ஆனால், அங்கு 2,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர். இந்த இடநெருக்கடிப் பிரச்சினை நீண்டகாலமாகவே நிலவி வருகின்றது.

எனவே, தற்போதைய அரசாங்கத்திடம் முறையான முகாமைத்துவம் இல்லை என்பது இந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை புலனாகியுள்ளது. சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உயிர்களுக்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பு கூற வேண்டும்.

முதன்முதலில் மோதல் சம்பவம் இடம்பெற்ற உடனேயே அரசாங்கம் துரிதமாகச் செயற்பட்டிருந்தால், இந்தளவிற்குப் பாரிய விபரீதமும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்காது.

ஆகவே, இந்தச் சம்பவத்திற்கு வெறுமனே வாய்த்த வார்த்தைகளால் பொறுப்பேற்பதை விடுத்து, நீதி அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.” இவ்வாறு முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை