செய்தி விளையாட்டு

சூரியவன்ஷி அதிரடி: ராஜஸ்தான் வெற்றி!

  • May 20, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி […]

இலங்கை ஐரோப்பா செய்தி

“அரசியலையும், அபிவிருத்தியையும் பிரிக்க முடியாது” – பிரிட்டனில் பிரதமர் உரை!

  • May 20, 2026
  • 0 Comments

“அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும், தெரிவுகளையும் அரசியலே வடிவமைக்கின்றது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பிரைட்டன் நகரில் அமைந்துள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, […]

உலகம்

சீன ஜனாதிபதியை சந்திக்கும் புட்டின்!! உற்றுநோக்கும் உலகம்!

  • May 20, 2026
  • 0 Comments

சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு, “பழைய நண்பர்களுக்கு” இடையே தேநீர் அருந்தியபடி நடைபெறும் ஒரு நெருக்கமான தனிப்பட்ட உரையாடலுடன் நிறைவடையும் என  சீனாவின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்ரம்பின் சீன விஜயத்தை தொடர்ந்து புட்டின் சீனா செல்வதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதுடன், உன்னிப்பாக ஆராயப்பட்டு வருகிறது. அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்டிருக்கும் இரண்டு முக்கிய நாடுகளின் தலைவர்கள், பெய்ஜிங்கிற்கு […]

ஐரோப்பா

ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சராக பதவியேற்கிறார் ஜான் ஸ்வினி!

  • May 20, 2026
  • 0 Comments

ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியின் (SNP) தலைவர் ஜான் ஸ்வினி ( John Sweeney), ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்கெடுப்பிற்கு பிறகு அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மன்னர்  சார்லஸ் வழங்கிய அரச ஆணை மூலம் அவர் முறைப்படி  இன்று பதவியேற்கவுள்ளார். தனது தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஸ்காட்டிஷ் பாராளுமன்றத்தில் பேசிய ஸ்வினி, “முழு ஸ்காட்லாந்திற்குமான முதல் அமைச்சராக இருப்பேன்” என்று உறுதியளித்துள்ளார். 1999 முதல் ஸ்காட்டிஷ் பாராளுமன்ற […]

அரசியல் இலங்கை செய்தி

இன அழிப்பு குறித்து விஜய்க்கு ஏன் கடிதம் எழுத வேண்டும்: மஹிந்த அணி கொதிப்பு!

  • May 20, 2026
  • 0 Comments

“புலிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த 2 லட்சத்து 90 தமிழ் மக்களை எமது ராணுவமே மீட்டது. இன அழிப்பை நாமே தடுத்தோம். எனவே, இன அழிப்பு தொடர்பில் எந்த அடிப்படையில் தமிழக முதல்வருக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் எழுத முடியும்” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். “ மே 18 ஆம் திகதியை […]

உலகம் செய்தி

போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வு: மஹிந்தவுக்கு கதவடைப்பு?

  • May 20, 2026
  • 0 Comments

கொழும்பில் நேற்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்விற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், “ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் […]

ஆஸ்திரேலியா செய்தி

சிட்னியை கிலிகொள்ள வைத்த துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி: நால்வர் படுகாயம்!

  • May 20, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி தெற்மேற்குப் பகுதியில் வீடொன்றுமீது பாதாளக்குழு நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். சிட்னியைச் சேர்ந்த பிரபல Rap இசைக் குழுவான OneFour இன் முன்னாள் உறுப்பினரான அலை அஹியோ Alai Ahio , Canley Heights பகுதியில் உள்ள வீட்டில் தனது நண்பர்களுடன் இருந்தவேளையிலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பொலிஸாருக்கு அவசர அழைப்புகள் வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, இரவு […]

உலகம்

நைஜீரியா – அமெரிக்கா கூட்டு நடவடிக்கை – 175 பயங்கரவாதிகள் கொலை!

  • May 20, 2026
  • 0 Comments

நைஜீரிய மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் இணைந்து நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில், இஸ்லாமிய அரசு குழுவின் இரண்டாவது உயர்மட்டத் தலைவர் உட்பட 175 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நைஜீரியாவும் அமெரிக்காவும் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் செயல்படும் “மிகவும் தீவிரமான பயங்கரவாதி” என்று அறியப்படும், இஸ்லாமிய அரசு குழுவின் உலகளாவிய செயல்பாட்டுத் தலைவர் அபு-பிலால் அல்-மினுகி, வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு […]

இலங்கை செய்தி

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் இலங்கையில் முக்கிய பேச்சு!

  • May 20, 2026
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் (Defense Security Cooperation University) பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (Institute for Security Governance – ISG) பிரதிநிதிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவினர் நேற்று பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை, பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போது, பாதுகாப்புத் துறைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பயிற்சி திட்டங்கள் குறித்து கவனம் […]

இலங்கை செய்தி

” மீண்டுமொரு பிரபாகரன் உருவாகினால் NPP அரசே பொறுப்பு கூறவேண்டும்”

  • May 20, 2026
  • 0 Comments

“புலிகளை நினைவுருவதற்கு இடமளிப்பதானது பாரதூரமான பிரச்சினையாகும். இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகினால் அதற்குரிய முழு பொறுப்பையும் என்.பி.பி. அரசாங்கம் ஏற்க வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு விமல் வீரவன்சவுக்கு […]