ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயை கடக்க படகில் ஏறிய குழுவினர் – வேடிக்கை பார்த்த பிரெஞ்சு பொலிஸார்

பிரான்ஸில் இருந்து ஆங்கிலக்கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைய முயற்சித்த குழுவொன்றை பிரெஞ்சு கடலோரக் காவல் படையினர் வேடிக்கை பார்த்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று மதியம் பிரான்ஸ் கடற்பகுதியில் சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமான புலம்பெயர்ந்தோர் படகில் ஏறியுள்ளனர்.

குழந்தைகளை படகில் ஏற்றியபோது ​​பிரெஞ்சு அதிகாரிகள் வேடிக்கை பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கடற்கரையில் இருந்த பலர் புகைப்படம் எடுத்துள்ளனர்.

புகைப்படம் எடுத்தவர்களை கைது செய்வதாக கடலோர பொலிஸார் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையே வன் இன்- வன அவுட் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பதற்காக எல்லைகளில் கூடுதல்  பொலிஸ் காவலை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் பொலிஸார் அசமந்த போக்காக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்