மரண தண்டனையை ஏற்கமுடியவில்லை – பேராயர் அறிக்கை
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ள பேராயர் மரண தண்டனை விதிப்பதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற இடங்களில் திட்டமிட்ட அல்லது தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பேராயர் மறைமாவட்டம் அழைப்பு விடுத்ததுடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.
இருப்பினும், மரண தண்டனை மனித மாண்பை மீறுவதால், கத்தோலிக்க திருச்சபையின் 2018 திருத்தப்பட்ட மறைக்கல்வி நூலின் 2267 ஆம் பந்தியின் கீழ் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.
எனவே, மரண தண்டனை விதிப்பதை கத்தோலிக்க திருச்சபை ஏற்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அதன் ஆலோசனைகளிலோ அல்லது முடிவுகளிலோ தலையிடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




