‘விடுதலைப் புலிகள் முகாம்’ குறித்து வதந்தி பரப்பிய நபர் கைது
கிளிநொச்சி, அக்கராயன்குளம் வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்யானத் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலமும், ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமும் சந்தேகநபர் இந்த போலித் தகவல்களைப் பரப்பியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்படி, அக்கரயன்குளம் காவல் எல்லைக்குட்பட்ட பாலை வனப்பகுதியில் எல்.டி.டி.ஈ […]













