ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – பலர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் நேற்று தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் சிக்கி 30 தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படும் கூடுதல் சுரங்கத் தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும், ஆனால் அவர்களை உயிருடன் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு “மிகக் குறைவு என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்க செய்தித் தொடர்பாளர் எவரிஸ்ட் என்கமானா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு “நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்க அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகின்றனர்” என்றும் கூறினார்.




