சுவிஸின் அழகிய கிராமத்திற்கு ஏற்பட்டுள்ள பேரழிவு – மக்கள் வெளியேற்றம்
சுவிட்சர்லாந்தில் கிராமமொன்று நிலச்சரிவு அபாயம் காரணமாக மக்களை வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள காண்டர்ஸ்டெக் Kandersteg கிராமத்தில் உள்ள 1300 குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பிட்ஸே ஸ்டெய் Spitze Stei எனப்படும் மலைப்பக்கப் பாறை அமைப்பானது, ஒரு மாபெரும் நிலச்சரிவின் மூலம் பள்ளத்தாக்கில் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 15-20 மில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த பாறை சரிந்தால் மிகப் பெரிய பேரிடர் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




