இலங்கை செய்தி

‘விடுதலைப் புலிகள் முகாம்’ குறித்து வதந்தி பரப்பிய நபர் கைது

TID arrests man over alleged fake LTTE Training Camp claim

கிளிநொச்சி, அக்கராயன்குளம் வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத பொய்யானத் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் 46 வயது நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலமும், ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமும் சந்தேகநபர் இந்த போலித் தகவல்களைப் பரப்பியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்படி, அக்கரயன்குளம் காவல் எல்லைக்குட்பட்ட பாலை வனப்பகுதியில் எல்.டி.டி.ஈ பயிற்சி முகாம் இயங்கி வருவதாகக் கூறிய குற்றச்சாட்டின் பேரில், அந்த நபர் ஆகஸ்ட் 18 அன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தண்டனைச் சட்டம் மற்றும் காவல்துறை அவசரச் சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை