வாழ்வியல்

தலைமுடிக்கு ஏற்ற வகையில் எண்ணெயை எப்படி தெரிவு செய்ய வேண்டும் தெரியுமா?

  • September 15, 2026
  • 0 Comments

ஆண்,பெண் ஆகிய இரு பாலருக்குமே இருக்கக்கூடிய மிகப்பெரும் பிரச்சினை தலைமுடிப் பிரச்சினையாகும். இதற்கு மிக முக்கிய காரணம், எமது தலைமுடியின் தன்மைக்கேற்ற சரியான எண்ணெயைத் தேர்வு செய்யாமல் தலைமுடியைப் பராமரிப்பதாகும். ஆகவே, எமது தலைமுடியின் தன்மையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதையும், அதற்கான சரியான எண்ணெய் எது என்பதைப் பற்றியும் பார்க்கலாம். முதலில் அரைவாசி நீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் குவளையொன்றினுள் எமது தலைமுடி ஒன்றை இட்டு 5 நிமிடங்கள் காத்திருந்தால் எமது முடியின் தன்மையை இலகுவாகக் கண்டறியலாம். 5 […]

ஐரோப்பா

சிக்னல் உளவுப் கப்பலை கொள்வனவு செய்யும் ஜெர்மனி

  • September 14, 2026
  • 0 Comments

புதிய வகையைச் சேர்ந்த நான்காவது சிக்னல் உளவுப் கப்பலை (signals intelligence ship) கொள்வனவு செய்யவுள்ளதாக ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இன்று அறிவித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீட்டு வரைவு ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ரைன்மெட்டல்’ (Rheinmetall) நிறுவனத்தால் கட்டப்படும் இத்தகைய மூன்றாவது கப்பலின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்வு வடகிழக்கு நகரமான வோல்காஸ்டில் (Wolgast) நடைபெற்றது. இதில் பேசிய பிஸ்டோரியஸ், மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழலில் நிலவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு (situational […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் கோர விபத்து – 21 பேர் பலி

  • September 14, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் முக்கிய நெடுஞ்சாலையில் இரண்டு மினிபஸ் டாக்சிகள் மற்றும் மற்றொரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் இன்று அறிவித்தனர். சாலைப் போக்குவரத்து மேலாண்மை நிறுவனத்தின்  தகவலின்படி, கேப் டவுனுக்கு கிழக்கே சுமார் 380 கிலோமீட்டர் (236 மைல்) தொலைவில் உள்ள பிரின்ஸ் ஆல்பர்ட் மற்றும் லீயு-காம்கா (Leeu-Gamka) இடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. “வெஸ்டர்ன் கேப்பில் உள்ள அவசர சேவைகள் மற்றும் அதிகாரிகள் […]

ஐரோப்பா செய்தி

AI தலைவர்களுடன் உச்சிமாநாடு – மன்னர் சார்லஸ் அழைப்பு

  • September 14, 2026
  • 0 Comments

மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக, மன்னர் சார்லஸ் செயற்கை நுண்ணறிவுத் தலைவர்களுடன் ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாடானது ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ளது. செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மனித கண்ணியத்தை நிலைநிறுத்துவதையும் சமூகங்களுக்குப் பயனளிப்பதையும் உறுதி செய்வதற்காக, டிச்லி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட ஒரு சாசனத்தை நிறுவுவதை ஆராய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்தின் அதிவேகம் குறித்த கவலைகள் காரணமாக, இந்தத் துறை தனது வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் […]

ஐரோப்பா

இந்த ஆண்டு ஹலோவீன் திருவிழா தடைப்பட வாய்ப்பு

  • September 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பதிவான கடும் வெப்ப அலைகளும், தொடர்ச்சியான வறட்சியும் பூசணிப் பயிர்களின் வளர்ச்சியை கடுமையாகப் பாதித்துள்ளமையால் ஹலோவீன் திருவிழா தடைப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே முதல் செப்டம்பர் வரையிலான உச்ச பருவத்தில், இப்பகுதியில் 40 நாட்களுக்கும் மேலாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால், பூசணிகள் சரியாக விளையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டில் பிரபலமான ஹலோவீன் திருவிழாவிற்கு பூசணிக்காய் தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஹாலோவீன் அன்று குடும்பங்கள் தங்கள் பூசணிகளில் வண்ணம் […]

இலங்கை

10,000 தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

  • September 14, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இன்று இரண்டு முக்கிய தொழிலாளர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. முறையான மற்றும் வெளிப்படையான வேலைவாய்ப்பு கட்டமைப்பின் கீழ் ஆரம்பகட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு வழிவகுக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன. பாங்காக் நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் தாய்லாந்தின் தொழிலாளர் துறை அமைச்சர் ஜூலாபுன் அமோர்ன்விவாட் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ஒப்பந்தங்களின் அமுலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு கூட்டுப் […]

உலகம்

எரிமலை செயற்பாடு – சிலியில் விமான சேவைகள் பாதிப்பு

  • September 14, 2026
  • 0 Comments

சிலியில் உள்ள கட்டானியா விமான நிலையம், இன்று பிற்பகல் 04.00 மணிவரை உள்வரும் விமான சேவைகளை நிறுத்திவைத்துள்ளது. எட்னா மலையிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் எரிமலைச் சாம்பல் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் விமான நிலையம் 05 நாள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தொடர்ச்சியான எரிமலைச் சாம்பல் வெளியேற்றம் விமானப் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது என்றும், விமான இயந்திரங்களுக்குள் உறிஞ்சப்படும் சாம்பல் அவற்றைச் செயலிழக்கச் செய்யக்கூடும் […]

ஐரோப்பா

ரஷ்ய ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அமெரிக்கா அழைப்பு

  • September 14, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் டீசல் உற்பத்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளதை கிரெம்ளின் வரவேற்றுள்ளார். ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை நிறுத்துமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ட்ரம்ப் நேற்று அழைப்பு விடுத்தார். இந்தத் தாக்குதல்கள் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவும், அது “உலகைப் பாதிக்கிறது” என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ட்ரம்பின் கூற்றை வரவேற்றுள்ள கிரெம்ளின் செய்தி தொடர்பாளர்  டிமிட்ரி பெஸ்கோவ், “பொதுமக்களின் பொருளாதார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு […]

உக்ரைன் - போலந்து எல்லையருகே ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்கள், உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கு நேட்டோ இராணுவக் கூட்டமைப்பைத் தூண்டும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) தெரிவித்தார். ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கான ஆதரவை வலுப்படுத்துகிறது நேட்டோ

  • September 14, 2026
  • 0 Comments

உக்ரைன் – போலந்து எல்லையருகே ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்கள், உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை மேலும் அதிகரிப்பதற்கு நேட்டோ இராணுவக் கூட்டமைப்பைத் தூண்டும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) தெரிவித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் உரையாற்றிய மார்க் ரூட்டே, “நேட்டோ எல்லைக்கு மிக அருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் விரக்தியையும், பயத்தையும் பீதியையும் விதைக்கும் அவரது எண்ணத்தையுமே காட்டுகின்றன. உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடர்வதில் […]

இலங்கை

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – 17, 18 ஆம் திகதிகளில் முடங்கும் சேவை

  • September 14, 2026
  • 0 Comments

ரயில் பொது மேலாளரின் பதவி குறித்து அரசாங்கம் இன்னும் ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்காததால், முன்னர் அறிவிக்கப்பட்டப்படி செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் திட்டமிட்டப்படி போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள்  தீர்மானித்துள்ளன. ரயில்வே தொழிற்சங்கங்களின் இணை ஒருங்கிணைப்பாளர் கசுன் சாமர ஜயசேகர இன்று (14) வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தனை தெரிவித்தார். இந்தப் போராட்ட நடவடிக்கை தொடர்பாக, போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளருக்கும் கூட்டு ரயில்  தொழிற்சங்கங்களின் தலைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே  போக்குவரத்து அமைச்சகத்தின் […]