ஐரோப்பா

சிறுவர்கள் பயணித்த பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் – உக்ரைன் மீது பழி

  • June 17, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது  ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பெலாரஸைச் சேர்ந்த சிறுவர் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை “பொதுமக்களுக்கு எதிரான […]

உலகம் செய்தி

அமைதி முயற்சி- ஈரானுக்கு துணை நிற்கும் சீனா

  • June 17, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடினர். இந்த இராஜதந்திர முன்னெடுப்பில் சீனாவின் பங்களிப்பிற்கும் ஆதரவிற்கும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். ஈரானின் பொறுப்பான அணுகுமுறையை பாராட்டிய சீன வெளிவிவகார அமைச்சர் , இந்த உடன்படிக்கையைச் செயல்படுத்துவதில் உதவத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். பிராந்தியத்தில் நிலவும் சவால்களைத் தீர்க்கவும் மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்டவும் இந்த ஒப்பந்தம் அவசியம் என்பதை […]

உலகம் முக்கிய செய்திகள்

டெக்சாஸில் நெடுஞ்சாலையில் விழுந்த விமானம் : ஒருவர் உயிரிழப்பு

  • June 17, 2026
  • 0 Comments

டெக்சாஸின் (Texas) லாரெடோவில் (Laredo) உள்ள லூப் (Loop) 20 நெடுஞ்சாலையில்,ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெட்ஜெட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான செஸ்னா சிடேஷன் லாட்டிட்யூட் (Cessna Citation Latitude) என்ற இரட்டை சிலிண்டர் ஜெட் ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் 06 பேர் பயணித்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   […]

ஜி 7 உச்சி மாநாட்டில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிகள் ஐரோப்பா செய்தி

லெபனானிலும் உடனடி போர் நிறுத்தம் – பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்து

  • June 17, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தம் அவசியம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron வலியுறுத்தியுள்ளார். ஜி7 உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்ட புதிய ஒப்பந்தத்தை அவர் பாராட்டியதுடன், இது பிராந்தியத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உதவும் என்றும் குறிப்பிட்டார். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை தனது உரையில் பிரான்ஸ் ஜனாதிபதி இடித்துரைத்தார்.

G-7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றபோது உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது தாக்குதல் – ட்ரம்பின் எச்சரிக்கையால் மீண்டும் பரபரப்பு

  • June 17, 2026
  • 0 Comments

ஈரானுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியானது அல்ல என்றும் , ஈரான் முறையாகச் செயல்படாவிட்டால் மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பிரான்ஸில் நடைபெறும் மாநாட்டில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ” இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவோம். அவர்கள் தலைகளில் குண்டுகளை வீசவும் முற்படுவோம். […]

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் நாடாளுமன்றத்தில்..... அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு எங்கே? NPP அரசு மௌனம்

  • June 17, 2026
  • 0 Comments

புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தி SJP கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா Ajith P Perera கூறியவை வருமாறு , “ பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்படும் என இந்த அரசாங்கம் கூறினாலும், அது நடக்குமா என்பதில் எனக்கு நம்பிக்கை […]

சோமாலிலாந்து ஜனாதிபதி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டபோது, இஸ்ரேல் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தியவேளை உலகம் செய்தி

சோமாலிலாந்தில் இஸ்ரேல் ராணுவத் தளம்?

  • June 17, 2026
  • 0 Comments

தங்கள் நாட்டில் இஸ்ரேல் ராணுவத் தளம் அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகளை சோமாலிலாந்தின் Somaliland பாதுகாப்பு அமைச்சரான Mohamed Yusef Ali முற்றாக நிராகரித்துள்ளார். எனினும், இஸ்ரேல் தற்போது சோமாலிலாந்தின் ராணுவம் மற்றும் காவல்துறைக்கு பயிற்சி அளித்து வருவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்தை , தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் விளங்குகின்றது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் பலமடைந்துள்ளன. சோமாலிலாந்தின் ஜனாதிபதி இஸ்ரேலுக்குச் சென்று Jerusalemமில் […]

Israel’s Ambassador to the United Nations Danny Danon உலகம் செய்தி

அவசரப்பட்டுவிட்டார் ட்ரம்ப் – இஸ்ரேல் தூதுவர் சீற்றம்

  • June 17, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான புதிய ஒப்பந்தம் தொடர்பில் ஐ.நாவுக்கான இஸ்ரேல் தூதுவர் Danny Danon , தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த உடன்படிக்கையானது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க முயன்றதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக Danny Danon விமர்சித்துள்ளார். இருப்பினும், இது ஒரு தொடக்கநிலை கட்டமைப்பு மட்டுமே என்பதால் இறுதி முடிவு எடுக்கும் வரை […]

பருத்தித்துறை நகரின் மூன்றாம் வட்டாரத்துக்குட்பட்ட கோரியடி பகுதியில் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கஜேந்திரகுமார் பங்கேற்று உரையாற்றும்போது அரசியல் இலங்கை செய்தி

ஒற்றையாட்சி அரசமைப்பு தமிழர்களை அடிமையாக்கும்

  • June 17, 2026
  • 0 Comments

புதிய அரசமைப்பு என்ற பெயரில் ஒற்றையாட்சி அரசமைப்பைத் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நிறைவேற்றுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவ்வாறு அது நிறைவேற்றப்பட்டால் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை இழந்து அடிமையினமாக மாற்றப்படும் பேராபத்து ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பருத்தித்துறை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு […]

ஐரோப்பா

மலட்டு தன்மையுடன் ஆண் நுளம்புகளை உருவாக்கும் பிரான்ஸ்

  • June 17, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்து வரும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது மில்லியன் கணக்கான டெங்கு நுளம்புகளை இனப்பெருக்கம் செய்து, அவற்றை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் அனைத்து நுளம்புகளும் மலட்டு தன்மையான ஆண் நுளம்புகளாகும். மான்ட்பெல்லியரில் (Montpellier)  உள்ள ஆலையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 1.5 மில்லியன் மலட்டு தன்மை உள்ள ஆண் நுளம்புகள் உருவாக்கப்படுகின்றன. டெங்கு, ஜிகா மற்றும் சிக்கன்குனியா போன்ற நோய்களைப் பரப்பக்கூடிய […]