ஆர்னாப்’ புயலின் தாக்கம் – இந்தியாவில் ஏழு பேர் உயிரிழப்பு
இந்தியாவில் பேரழிலை ஏற்படுத்திய ‘ஆர்னாப்’ புயலின் தாக்கத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இந்தப் புயல் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, 1,097 கிராமங்களில் உள்ள 830 குடும்பங்களைச் சேர்ந்த 59,028 பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் மழையால் ஏற்பட்ட மொத்த சொத்து மற்றும் உள்கட்டமைப்பு சேதத்தின் மதிப்பு சுமார் 4,600 கோடி இந்திய ரூபாய் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று (30) பெய்த கனமழையின் காரணமாக, ஒடிசாவின் பஞ்சநகர் மாவட்டத்தில் உள்ள, கஞ்சம் மற்றும் கந்தமால் எல்லையில் அமைந்துள்ள கிடிபாபலி என்ற மலை கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
மொத்தம் 26 பேர் வசிக்கும் இந்தச் சிறிய கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர் என அப்பகுதி பேரிடர் மேலாண்மைப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் மழைக்கு மத்தியில், 13 கிராமவாசிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




