லூசியானாவிலிருந்து 150 ஆப்கானியர்களை நாடு கடத்த நடவடிக்கை
லூசியானாவிலிருந்து சுமார் 150 ஆப்கானியர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து அவர்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாடு கடத்தப்பட உள்ளவர்கள் சித்திரவதை மற்றும் மரணதண்டனை போன்ற கடுமையான அபாயங்களை எதிர்கொள்வார்கள் என உதவி அமைப்புகளும் மனித உரிமை வழக்கறிஞர்களும் எச்சரித்துள்ளனர்.
பாதிக்கப்படக்கூடிய அகதிகளை மீண்டும் தீவிர அபாயப் பகுதிகளுக்குள் தள்ளுவதற்கான சட்டரீதியான வழி இதுவென ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான் ஆட்சியின் கீழ் பாதுகாப்பு நிலைமைகள் மேம்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, 11,000-க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களுக்கான தற்காலிகப் பாதுகாப்பு அந்தஸ்தை நிர்வாகம் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




