இந்தியா செய்தி

பாடசாலைக்குள் புகுந்து மாணவிகள்மீது தாக்குதல்: ஆந்திராவில் பயங்கரம்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில், உயர்தர பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில், உயர்தர பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரப்தாடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சபை உயர்நிலைப் பாடசாலையில், சனிக்கிழமை (31) காலை சுமார் 10.30 மணியளவில் பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 21 வயதுடைய இளைஞர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து இரு மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் இரு மாணவிகளும் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக அனந்தபூர் அரச பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை நடத்தியவர் ஹேமந்த் என்றழைக்கப்படும் டும்மு என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், பின்னர் தர்மாவரம் ரயில் நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை வழங்குமாறு மருத்துவக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், குற்றவாளிக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி