உலகம் செய்தி

மீண்டும் போர் வெடித்தால் பேரழிவு ஏற்படும்: எகிப்து எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் போரில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் போரில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி Badr Abdelatty தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச மூலோபாயக் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (IISS) மனாமா பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், ஈரான் மீதான தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், அதன் விளைவுகள் முந்தைய தாக்குதல்களைவிட மோசமானதாக அமையும் என அச்சம் வெளியிட்டார்.

“இரண்டாவது சுற்று மோதல் மேலும் ஆபத்தானதாகவும், அதிக அழிவுகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி