சிக்னல் உளவுப் கப்பலை கொள்வனவு செய்யும் ஜெர்மனி
புதிய வகையைச் சேர்ந்த நான்காவது சிக்னல் உளவுப் கப்பலை (signals intelligence ship) கொள்வனவு செய்யவுள்ளதாக ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இன்று அறிவித்துள்ளார்.
இதற்கான நிதி ஒதுக்கீட்டு வரைவு ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரைன்மெட்டல்’ (Rheinmetall) நிறுவனத்தால் கட்டப்படும் இத்தகைய மூன்றாவது கப்பலின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்வு வடகிழக்கு நகரமான வோல்காஸ்டில் (Wolgast) நடைபெற்றது.
இதில் பேசிய பிஸ்டோரியஸ், மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழலில் நிலவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு (situational awareness) இக்கப்பல்கள் மிக முக்கியமானவை என்று கூறினார்.
மேலும் தெரிவித்த அவர், “மற்றவர்களால் கேட்கவோ பார்க்கவோ முடியாதவற்றை இக்கப்பல்களால் கேட்கவும் பார்க்கவும் முடியும். கடலில் இவை நமது கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுகின்றன. இவை பரந்த அளவிலான சிக்னல்கள் மற்றும் ஒலிகளை உள்வாங்கிப் பகுப்பாய்வு செய்கின்றன.”என்றார்.




