Utilita Bowl மைதானத்தில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில், இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. செய்தி விளையாட்டு

இங்கிலாந்து அணி அபார வெற்றி

  • September 16, 2026
  • 0 Comments

Utilita Bowl மைதானத்தில் நடைபெற்ற முதலாவது T20 போட்டியில், இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் (Harry Brook) தனக்குரிய பாணியில் அதிரடி காட்டி தனது இரண்டாவது மற்றும் அதிவேக T20 சதத்தைப் பதிவு செய்தார். இங்கிலாந்தின் முதன்மை வீரரான புரூக், 42 பந்துகளில் சதமடித்தார். கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பில் சால்ட் (Phil Salt) அடித்த 39 பந்து சதத்திற்கு அடுத்தபடியாக, இங்கிலாந்து […]

உலகம்

தென்னாப்பிரிக்காவை உலுக்கும் தொடர் கொலைகள் – பெண்களுக்கு எச்சரிக்கை

  • September 15, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்கா – ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்குப் பகுதியில் இரண்டு மாதங்களுக்குள் ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் காவல்துறையினர் பெண்களுக்குப் பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவங்களுக்கு இடையே தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் இந்த கொலைகளுக்கு ஒருவரே காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் […]

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை இலங்கை

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

  • September 15, 2026
  • 0 Comments

2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று காணொளி வாயிலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விளக்கமறியல் காலத்தை  செப்டம்பர் 29 ஆம் திகதி வரை நீடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஏனையோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஒரு வர்த்தகர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட கொலைகள் தொடர்பிலேயே பிள்ளையான் மற்றும் ஏனைய […]

ஐரோப்பா

அரண்மனை பாராமரிப்பிற்காக £99.9 மில்லியன் ஒதுக்கீடு – நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்

  • September 15, 2026
  • 0 Comments

அரச அரண்மனைகளைப் பராமரிக்கவும், உத்தியோகபூர்வ கடமைகளுக்கு நிதியளிக்கவும், 2027-28 ஆம் ஆண்டுக்கான £99.9 மில்லியன் இறையாண்மை மானியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். பக்கிங்ஹாம் அரண்மனையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைவதைப் பிரதிபலிக்கும் வகையில், அரச குடும்பத்திற்கான நிதியுதவியில் ஏற்ற இறக்கங்களை அனுமதிக்கும் விதமாக, இந்த இறையாண்மை மானிய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கடுமையான துன்பத்தை அனுபவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக பொது நிதிகள் திருப்பிவிடப்பட வேண்டும் என்று […]

வெனிசுலாவுடனான தனது இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தி , அந்நாட்டிற்கான புதிய தூதுவர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக பிரித்தானியா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி

வெனிசுலாவுக்கு புதிய தூதுவரை நியமித்தது பிரித்தானியா

  • September 15, 2026
  • 0 Comments

வெனிசுலாவுடனான தனது இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தி , அந்நாட்டிற்கான புதிய தூதுவர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக பிரித்தானியா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. வெனிசுலாவில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்த ஆதரவளிக்கும் தனது பங்கை வலுப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லண்டன் தெரிவித்துள்ளது. “இத் தீர்மானமானது பரந்த சர்வதேச உறவுகளை மீண்டும் புதுப்பிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்” என பிரித்தானியா அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இந்நடவடிக்கையானது சர்ச்சைக்குரிய வெனிசுலாவின் 2024 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கோ அல்லது அங்குள்ள அரசியல் […]

கருத்து & பகுப்பாய்வு

பெர்முடா முக்கோணத்திற்கு அருகில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டுப்பிடிப்பு

  • September 15, 2026
  • 0 Comments

பெர்முடா முக்கோணத்திற்கு அருகில் ஏழு மைல் நீளமுள்ள ‘மூழ்கிய நகரம்’ ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. யூஎஃப்ஓ (UFO) ஆராய்ச்சியாளரான ஸ்காட் சி. வாரிங் (Scott C Waring), கியூபா மற்றும் ஹைட்டிக்கு அருகில் இந்த வடிவங்களைக் கண்டறிந்துள்ளார். இவை பண்டைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நகரத்தின் எச்சங்களாக இருக்கலாம் என்று அவர் வாதிடுகிறார். சீபெட் 2030′ (Seabed 2030) திட்டத்தின் இணையவழி வரைபடத்தைப் பயன்படுத்தி வாரிங் இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளார்.  இத்திட்டம் தற்போதைய பத்தாண்டுகளின் இறுதிக்குள் முழு கடல் […]

உலக உணவுத் திட்டத்தின் (WFP) புதிய தலைவராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பரிந்துரைக்கப்பட்ட லூக் லின்ட்பெர்க் (Luke Lindberg) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலகம் செய்தி

ட்ரம்பின் பரிந்துரை ஏற்பு: WFP புதிய தலைவராக Luke Lindberg தேர்வு

  • September 15, 2026
  • 0 Comments

உலக உணவுத் திட்டத்தின் (WFP) புதிய தலைவராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பரிந்துரைக்கப்பட்ட லூக் லின்ட்பெர்க் (Luke Lindberg) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல வேட்பாளர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஒப்புதல் அளித்துள்ளதா ஐ.நா. அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் சிரேஷ்ட விவசாய அதிகாரியான லின்ட்பெர்க்கை, ஐ.நா. செயலாளர் குத்தேரஸ் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைவரான சீனாவைச் சேர்ந்த கியூ டோங்யூ (Qu Dongyu) […]

உலகம்

ஏமனில் தீவிரமடையும் மோதலால் உள்நாட்டிலேயே இடம்பெயரும் மக்கள்

  • September 15, 2026
  • 0 Comments

ஏமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாக ஜிபூட்டிக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நாவின் அகதிகள் முகமை இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. “மனிதாபிமான உதவிகளைச் சென்றடையச் செய்வது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பாதுகாப்பற்ற சூழல், சேதமடைந்த சாலைகள், தொலைத்தொடர்புத் தடைகள் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவை நிவாரணப் பணிகளைப் பாதிக்கின்றன” என்று ஐ.நா. அகதிகள் […]

தேசிய மக்கள் சக்திக்கு தேர்தல் பிரசாரத்துக்காக புலம்பெயர் தமிழர்கள் (டயஸ்போராக்கள்) நிதி உதவி வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று (15) முற்றாக நிராகரித்துள்ளது. இலங்கை செய்தி

NPP தேர்தல் பிரச்சாரத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி? அரசு மறுப்பு

  • September 15, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்திக்கு தேர்தல் பிரசாரத்துக்காக புலம்பெயர் தமிழர்கள் (டயஸ்போராக்கள்) நிதி உதவி வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று (15) முற்றாக நிராகரித்துள்ளது. பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா […]

ஐரோப்பா

குழந்தை துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு – பிரான்ஸின் முன்னாள் மேயர் வாக்குமூலம்

  • September 15, 2026
  • 0 Comments

பிரெஞ்சுத் தலைநகரில் உள்ள அரசு மழலையர் பாடசாலைகள் மற்றும் தொடக்கப் பாடசாலைகளில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த குழந்தைத் துஷ்பிரயோகச் சம்பவங்களுக்கு நிறுவனங்களின் “கூட்டுத் தோல்வியே” காரணம் என்று பாரிஸ் நகரின் முன்னாள் மேயர் ஆன் இடால்கோ (Anne Hidalgo) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செனட் விசாரணையில் பதிலளித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர் மதிய உணவு இடைவேளைகள், ஓய்வு நேரங்கள் மற்றும் பள்ளி முடிந்த பிறகான செயல்பாடுகளின் போது சிறு குழந்தைகள் மீதான […]