தென்னாப்பிரிக்காவை உலுக்கும் தொடர் கொலைகள் – பெண்களுக்கு எச்சரிக்கை
தென்னாப்பிரிக்கா – ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்குப் பகுதியில் இரண்டு மாதங்களுக்குள் ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் காவல்துறையினர் பெண்களுக்குப் பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவங்களுக்கு இடையே தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் இந்த கொலைகளுக்கு ஒருவரே காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து, குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் 38 வயதான எலிசபெத் மொசெலக்ஹோமோவும் ஒருவர்; இவர் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தபோது காணாமல் போன நிலையில், பின்னர் கெம்ப்டன் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான கொலைகள் மற்றும் வன்முறைக் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பாலின சமத்துவ ஆணையம் வலியுறுத்தியுள்ளது.




