உலகம் செய்தி

ட்ரம்பின் பரிந்துரை ஏற்பு: WFP புதிய தலைவராக Luke Lindberg தேர்வு

உலக உணவுத் திட்டத்தின் (WFP) புதிய தலைவராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பரிந்துரைக்கப்பட்ட லூக் லின்ட்பெர்க் (Luke Lindberg) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலக உணவுத் திட்டத்தின் (WFP) புதிய தலைவராக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பரிந்துரைக்கப்பட்ட லூக் லின்ட்பெர்க் (Luke Lindberg) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பல வேட்பாளர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட அவருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஒப்புதல் அளித்துள்ளதா ஐ.நா. அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் சிரேஷ்ட விவசாய அதிகாரியான லின்ட்பெர்க்கை, ஐ.நா. செயலாளர் குத்தேரஸ் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைவரான சீனாவைச் சேர்ந்த கியூ டோங்யூ (Qu Dongyu) ஆகியோர் பரிந்துரைத்துள்ளதாக WFP ஆளும் குழுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பதவிக்கு சுமார் 54 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 9 பேர் இறுதிப் பட்டியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

இத் தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.நா. பேச்சாளர் பர்ஹான் ஹக், நேர்காணல் குழுவின் பரிந்துரையை அமைப்பு ஏற்றுக்கொண்டு அதனை WFP ஆளும் குழுவிற்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்களின் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

WFP ஆளும் குழுவின் இறுதி ஒப்புதல் பெறப்பட்டதும் இப் நியமனம் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈரான் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் பட்டினி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு சுமார் 300 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என WFP எச்சரித்துள்ளது.

ஐ.நா. மற்றும் FAO அமைப்புகளின் கூட்டுத் திட்டமாக உருவாக்கப்பட்டு, ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் உலக உணவுத் திட்டமானது உலகளாவிய அவசரகால உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிதி வெட்டுக்களுக்கு மத்தியிலும், WFP அமைப்பிற்கு அதிக நிதி வழங்கி வரும் முதன்மை நாடாக அமெரிக்காவே திகழ்கின்றது. இதனால் பாரம்பரியமாக இப் பொறுப்பிற்கு அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே தலைமை தாங்கி வருகின்றனர்.

மேலும், WFP அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கும் சில நன்கொடைகள் நேரடியாக உணவுப் பொருட்களாகவோ அல்லது அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருட்களாகவோ வழங்கப்படுவதால், இந் நியமனம் அமெரிக்க விவசாய வணிகத் துறைக்கும் ஆதரவாக அமையும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி