உலகம்

ஏமனில் தீவிரமடையும் மோதலால் உள்நாட்டிலேயே இடம்பெயரும் மக்கள்

ஏமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாக ஜிபூட்டிக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நாவின் அகதிகள் முகமை இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

“மனிதாபிமான உதவிகளைச் சென்றடையச் செய்வது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பாதுகாப்பற்ற சூழல், சேதமடைந்த சாலைகள், தொலைத்தொடர்புத் தடைகள் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவை நிவாரணப் பணிகளைப் பாதிக்கின்றன” என்று ஐ.நா. அகதிகள் முகமை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையே முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான ‘பாப்-எல்-மண்டேப்’ (Bab el-Mandeb) நீரிணையை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர்.

அத்துடன் சவுதி நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹூதிகளின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவுதி மற்றும் ஏமன் நாட்டு விமானப்படைகள் ஹூதிகளின் இலக்குகள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்