இலங்கை

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை

2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய வழக்கு இன்று காணொளி வாயிலாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது விளக்கமறியல் காலத்தை  செப்டம்பர் 29 ஆம் திகதி வரை நீடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஏனையோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஒரு வர்த்தகர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட கொலைகள் தொடர்பிலேயே பிள்ளையான் மற்றும் ஏனைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்