ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவிருந்த பாலஸ்தீன பிரதிநிதிகள் குழுவுக்கு விசா மறுக்கப்பட்ட முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன தூதுக்குழுவுக்காக அமெரிக்காவிடம் EU விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • September 19, 2026
  • 0 Comments

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவிருந்த பாலஸ்தீன பிரதிநிதிகள் குழுவுக்கு விசா மறுக்கப்பட்ட முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், பாலஸ்தீனக் குழுவினருக்கு நுழைவு விசாக்கள் மறுக்கப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் டிரம்ப் நிர்வாகம் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிற அதிகாரிகள் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் செல்வது தடுக்கப்பட்டது […]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கவும்: பிரதமரிடம் எதிரணி கோரிக்கை

  • September 19, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்கோரிக்கையை விடுத்தார். இதன்போது, “22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் ‘மொட்டு’க் கட்சியும் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) பங்கேற்குமா?” என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஞ்சித் மத்தும பண்டார, “ஐக்கிய […]

“தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் வெண்கலச் சிலை வைத்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படாமல் இருப்பது ஏன்? அரசியல் இலங்கை செய்தி

திலீபனுக்கு யாழில் வெண்கலச் சிலை: விமல் கடும் எதிர்ப்பு

  • September 19, 2026
  • 0 Comments

“தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் வெண்கலச் சிலை வைத்த தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்படாமல் இருப்பது ஏன்? தமிழ் பிரிவினைவாத புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கேற்ப இந்த அரசாங்கம் செயற்படுகிறதா?” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: “திலீபன் புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவில் இருந்தவர். இராணுவத்துடனான மோதலில் காயமடைந்த பின்னரே […]

2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலகளவில் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான 'மூடிஸ் ரேட்டிங்ஸ்' (Moody's Ratings) புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா செய்தி

இந்தியாவில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி: Moody’s நிறுவனம் கணிப்பு

  • September 19, 2026
  • 0 Comments

2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலகளவில் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ‘மூடிஸ் ரேட்டிங்ஸ்’ (Moody’s Ratings) புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த மூடிஸ், தற்போது அதை 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் உண்மையான GDP வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் […]

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி (Tariff) விதிக்க வழிவகுக்கும் ரஷ்ய தடைகள் தொடர்பான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தியா உலகம் செய்தி

இந்தியாவுக்கு 100 சதவீத வரி: கையெழுத்திட்டார் ட்ரம்ப் ட்ரம்ப்

  • September 19, 2026
  • 0 Comments

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி (Tariff) விதிக்க வழிவகுக்கும் ரஷ்ய தடைகள் தொடர்பான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் இச்சட்டமூலம் 262 – 159 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களில் டிரம்பின் ஒப்புதல் கிடைத்துள்ளது. வாஷிங்டனில் உக்ரைனின் தீவிர […]

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் 'புல்வெளியில் இரட்டை மலர்கள்' சின்னத்தை முடக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியா செய்தி

கட்சி பெயர், சின்னம் முடக்கம்: சட்டப் போராட்டத்தில் இறங்கினார் மம்தா

  • September 19, 2026
  • 0 Comments

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் ‘புல்வெளியில் இரட்டை மலர்கள்’ சின்னத்தை முடக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலிக்கும்போது, ​​திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை என்று மம்தா பாஜர்ஜி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், அதிருப்தி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆவணங்கள் […]

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

விபத்தில் இளம் பெண் பலி: மலையகத்தில் சோகம்

  • September 19, 2026
  • 0 Comments

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் (இஸ்கூட்டி) பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் […]

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - ஆண்ட்ரே பிரான்ச், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். செய்தி

ஐ.நா. பிரதிநிதியுடன்சிறீதரன் எம்.பி. சந்திப்பு

  • September 19, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிரான்ச், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்புத் குறித்து மார்க் – ஆண்ட்ரே பிரான்ச் தனது சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், நல்லிணக்க முயற்சிகளில் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான கூட்டணிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, வடக்கில் காணிகளை விடுவித்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிலைவரங்கள் தொடர்பில் இருவரும் விரிவாகக் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்டுள்ளார்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை மன்னித்து விடுவித்துத் தருமாறு அவரது தாயார் சிவராசா யோகலட்சுமி கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை செய்தி

எனது மகனை காப்பாற்றுங்கள்: அனோஜனின் தாயார் கண்ணீர்மல்க வேண்டுகோள்

  • September 19, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை மன்னித்து விடுவித்துத் தருமாறு அவரது தாயார் சிவராசா யோகலட்சுமி கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார். சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் குறித்துப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் கருத்துத் தொடர்பில், அசல் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனோஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அவருக்கு மரண […]

கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் அந்தத் தீவில் சொந்தமாக இராணுவத் தளங்களைக் அமைப்பதை தடுப்பதற்கும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முக்கிய செய்திகள்

கிரீன்லாந்தில் ராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

  • September 19, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் அந்தத் தீவில் சொந்தமாக இராணுவத் தளங்களைக் அமைப்பதை தடுப்பதற்கும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பதிவில் இது குறித்து எழுதியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி எதிரி நாடுகள் எதுவும் இந்தத் தீவில் முக்கியமான […]