ஐரோப்பா

ஹோர்முஸ் நீரிணையில் 03 கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக அறிவிப்பு

ஹோர்மூஸ் நீரிணையில் அங்கீகரிக்கப்படாத பாதையை பயன்படுத்தி பயணிக்க முயன்ற மூன்று எண்ணெய் கப்பல்கள்  வெடி விபத்துக்கு உள்ளாகி தீப்பிடித்து எரிந்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை இன்று இதனை அறிவித்துள்ளது.

2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைச் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல்களில் ஒன்று, கண்ணிவெடி ஒன்றின் மீது மோதியே இந்த விபத்து நேர்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவிற்குச் சொந்தமான ஆளில்லா கப்பல் ஒன்றை தாங்கள் அழித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்திடமிருந்து இது குறித்த உடனடி உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை என ரொய்டரஸ் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்