இந்தியா செய்தி

கட்சி பெயர், சின்னம் முடக்கம்: சட்டப் போராட்டத்தில் இறங்கினார் மம்தா

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் 'புல்வெளியில் இரட்டை மலர்கள்' சின்னத்தை முடக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் ‘புல்வெளியில் இரட்டை மலர்கள்’ சின்னத்தை முடக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலிக்கும்போது, ​​திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை என்று மம்தா பாஜர்ஜி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிருப்தி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் அதிக நம்பிக்கை வைத்திருப்பது ஏன் என்றும், அவர்களில் பல சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகரிடம் இன்னும் நிலுவையில் உள்ளன என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்தா தலைமையிலான தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளது.

இதில், 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பதில் மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகர் தாமதம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவையில் ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்ததற்கும் இந்த மனு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நந்​தி​கி​ராம், ரெஜினகர் சட்​டப் பேரவை தொகுதிகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி இடைத்​தேர்​தல் நடைபெறுகிறது.

இந்த தேர்​தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணி​யும், அரூப் ராய் தலை​மையி​லான அணியும் திரிணமூல் காங்கிரஸ் கட்​சி​யின் பெயர் மற்​றும் அக்​கட்​சி​யின் புல்​வெளி​யில் இரட்டை மலர்​கள் சின்​னத்​துக்கு உரிமை கோரின.

இதுதொடர்​பாக, தேர்​தல் ஆணை​யத்​திடம் இரு அணி​களும் முறை​யிட்ட நிலை​யில், இரு அணி​களுக்​கும் இடைத்​தேர்​தலில் தனித்​தனி பெயர் மற்​றும் தனித்​தனி சின்​னங்​களு​டன் போட்டியிட தேர்​தல் ஆணை​யம் அனு​ம​தித்​துள்​ளது.

இதன்​படி, மம்தா பானர்ஜி தலை​மையி​லான அணிக்கு “மம்தா ஆல் இந்​தியா திரிண​மூல் காங்​கிரஸ்” என்ற பெயரும், “கால்​பந்து வீரர்” சின்​ன​மும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

அரூப் ராய் தலை​மையி​லான அணிக்கு “டெ​மாக்​ரடிக் திரிண​மூல் காங்​கிரஸ்” என்ற பெயரும், “அஞ்சல் உறை” சின்​ன​மும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

மேற்​கு​வங்கத்​தில் கடந்த மே மாதம் நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில், பாஜகவை சேர்ந்த முதல்​வர் சுவேந்து அதி​காரி 2 தொகு​தி​களில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். பின்​னர், அவர் நந்தி​கி​ராம் தொகுதி எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார்.

இதைத்தொடர்ந்து, நந்​தி​கி​ராம் தொகு​திக்​கான இடைத்​தேர்​தல் நடை​பெறுகிறது. நந்​தி​கி​ராம் இடைத்​தேர்​தலில் மம்தா அணி​யின் சார்​பில், சஞ்​சிதா பிர​தான் தேய் வேட்பாள​ராக கடந்த ஞாயிறன்று அறிவிக்​கப்​பட்​டார். அவர் திடீரென தேர்தலில் இருந்து வில​கு​வ​தாக அறிவித்தார்.

இதையடுத்து, காங்​கிரஸ் வேட்​பாள​ருக்கு ஆதரவு அளிப்​ப​தாக மம்தா பானர்ஜி அறி​வித்​துள்​ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, அக்கட்சியின் வேட்பாளர் மிலன் பிரதான் பழைய கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி