உலகம்

சுவிட்சர்லாந்து – வடகொரியா வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் இக்னாசியோ காசிஸ் Ignazio Cassis, வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சோ சன் ஹுயியைப் Choe Son Hui  பியோங்யாங்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் தூதரக அலுவலகத்தை மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் திறப்பதற்காக பியோங்யாங்கிற்கு சென்றிருந்த அவர் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகளை முறைப்படுத்துவது மற்றும் அரசியல் உரையாடல்களை மீண்டும் தொடங்குவது குறித்து இருநாட்டு தலைவர்களும் இதன்போது விவாதித்துள்ளனர்.

கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு மற்றும் யூரேசிய பிராந்தியத்தில் உள்ள பரந்த பாதுகாப்பு சவால்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியோங்யாங்கில் உள்ள இந்த அலுவலகம், பெய்ஜிங்கில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்