இந்தியா

உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விபத்து – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

இந்தியாவின் இமயமலை மாநிலமான உத்தரகண்டில் ஹெலிகாப்டர் ஒன்று இன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பத்ரிநாத்திலிருந்து டேராடூன் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹெலிகாப்டரில் ஐந்து பயணிகள் மற்றும் ஒரு விமானி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோஷிமத் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகத் தகவல் கிடைத்துள்ளதாக உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே