செய்தி விளையாட்டு

T-20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர்

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஆடவர் சர்வதேச T 20 கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஆடவர் சர்வதேச T 20 கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

ஷார்ஜாவில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது T 20 போட்டியில், சிம்பாப்வே வீரர் தடிய்வனாஷே மருமணியை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ரஷீத் கான் இந்த மைல்கல்லை எட்டினார்.

தனது 120ஆவது சர்வதேச T 20 போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்துள்ள 28 வயதான ரஷீத் கான், 13.96 என்ற சராசரியிலும் 6.13 என்ற ஓட்டச் சிக்கன விகிதத்திலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதுவரை இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 3 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

சர்வதேச T 20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ரஷீத் கான் 200 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் அடில் ரஷீத் 171 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி