ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன தூதுக்குழுவுக்காக அமெரிக்காவிடம் EU விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவிருந்த பாலஸ்தீன பிரதிநிதிகள் குழுவுக்கு விசா மறுக்கப்பட்ட முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவிருந்த பாலஸ்தீன பிரதிநிதிகள் குழுவுக்கு விசா மறுக்கப்பட்ட முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், பாலஸ்தீனக் குழுவினருக்கு நுழைவு விசாக்கள் மறுக்கப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டும் டிரம்ப் நிர்வாகம் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிற அதிகாரிகள் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் செல்வது தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட ஈரான் தூதுக்குழுவுக்கு விசா வழங்க அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி