இந்தியா செய்தி

இந்தியாவில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி: Moody’s நிறுவனம் கணிப்பு

2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலகளவில் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான 'மூடிஸ் ரேட்டிங்ஸ்' (Moody's Ratings) புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.

2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலகளவில் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ‘மூடிஸ் ரேட்டிங்ஸ்’ (Moody’s Ratings) புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த மூடிஸ், தற்போது அதை 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் உண்மையான GDP வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், மற்ற அனைத்து G20 நாடுகளை விடவும் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளரும் என மூடிஸ் எதிர்பாா்க்கிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார அதிர்வுகளுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் நிலையான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ‘எல் நினோ’ தாக்கத்தால் பணவீக்கம் தொடர்பான அபாயங்கள் நிலவுவதாக மூடிஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

2026-27ஆம் நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கணித்த 7 சதவீதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி