latestnews,breakingnews,srilankanews,news update,lka,cricketnews, sportsnews,T20worldcup,politicalnews,cinemanews,indiannews,india,tamilnaadu, இந்தியா செய்தி

வறுமை ஒழிப்பில் இந்தியா முன்னேற்றம் – உலக வங்கி தகவல்

  • October 30, 2026
  • 0 Comments

இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கடந்த 2011ஆம் ஆண்டில் 27.1 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டில் அது 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகின் மிக வேகமாக வறுமையைக் குறைத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்வதாக உலக வங்கியின் 2026 ஒக்டோபர் மாத வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, நாளொன்றுக்கு 3 அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழும் மக்களின் விகிதமே தீவிர வறுமைக்கான அளவுகோலாகக் கணக்கிடப்படுகிறது. […]

ஆஸ்திரேலியாவில் விஷக் காளான்கள் கலந்த உணவை வழங்கி, பிரிந்துவாழ்ந்த தனது கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற பெண்ணொருவர், தனது தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

‘மரண விருந்தை’ ஏற்பாடு செய்த பெண் தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிப்பு

  • October 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விஷக் காளான்கள் கலந்த உணவை வழங்கி, பிரிந்துவாழ்ந்த தனது கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற பெண்ணொருவர், தனது தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டிருந்தபிணையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 51 வயதான எரின் பேட்டர்சன் (Erin Patterson) என்பவர், கடந்த ஆண்டு தனது மாமனார், மாமியார் மற்றும் மாமியாரின் சகோதரி ஆகிய மூவரையும் விஷக் காளான்கள் கலந்த உணவை […]

ஞானசார தேரரை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. எமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

போராட்டம் ஓயவில்லை – பிக்குகள் எச்சரிக்கை

  • October 30, 2026
  • 0 Comments

ஞானசார தேரரை விடுவிப்பதற்கான போராட்டத்தில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. எமது போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “விகாரமகாதேவி பூங்காவிலிருந்து நாம் வெளியேறிவிட்டோம் என்பதற்காக எமது போராட்டம் முடிவடைந்துவிடவில்லை. ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான போராட்டத்தைக் கைவிடவில்லை. அந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, மக்களின் மனநிலை என்ன என்பதை இந்த அரசாங்கம் அறிந்துகொள்ள […]

அரசாங்கத்தின் இயலாமையையும் திறமையின்மையையும் மூடி மறைப்பதற்காகவே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றன. இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்களால் ஜி.எல்.பி.பிளஸ் வரிச்சலுகை இல்லாமல்போகும் அபாய் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகை இல்லாமல்போகும் அபாயம் – சஜித் எச்சரிக்கை

  • October 30, 2026
  • 0 Comments

அரசாங்கத்தின் இயலாமையையும் திறமையின்மையையும் மூடி மறைப்பதற்காகவே அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றன. இவ்வாறான அடக்குமுறைச் சட்டங்களால் ஜி.எல்.பி.பிளஸ் வரிச்சலுகை இல்லாமல்போகும் அபாய் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (29) விசேட கூற்றொன்றை முன்வைத்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், அடிப்படை உரிமைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்தே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் […]

உலகம்

துருக்கியில் எரிமலை பாறை சரிந்து விழுந்து விபத்து – மூவர் மரணம்

  • October 29, 2026
  • 0 Comments

துருக்கியின் கப்படோசியா Cappadocia பகுதியில் எரிமலைப் பாறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர். சமீபத்திய கனமழையே இந்த சரிவைத் தூண்டியிருக்கலாம் என்று ஆளுநர் ஹுசைன் கோக் Huseyin Kok  தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களில் இருவர் துருக்கி நாட்டவர்கள் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். அவசர மீட்புக் குழுக்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரிந்து விழுந்த பாறைக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய மற்றவர்களையும் தேடி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புளூட்டோவிற்கு அப்பால் பனி நிறைந்த விண்பொருள் அடையாளம்

  • October 29, 2026
  • 0 Comments

புளூட்டோவிற்கு அப்பால் சுற்றி வரும் பனி நிறைந்த ஒரு விண்பொருளை சிலியில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். தொலைநோக்கியில் இந்த பொருள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘2026 ED138’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்பொருள், சுமார் 370 முதல் 930 மைல்கள் (600 முதல் 1,500 கி.மீ) விட்டம் கொண்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது பூமியை விட சுமார் 46 மடங்கு அதிக தொலைவில் சூரியனைச் சுற்றி வருகிறது. ஒப்பீட்டளவில், புளூட்டோ சூரியனிலிருந்து சராசரியாக 40 மடங்கு அதிக […]

ஐரோப்பா

பிரித்தானியா வரை நுழையும் எபோலா தொற்று – சுகாதார அதிகாரி எச்சரிக்கை

  • October 29, 2026
  • 0 Comments

எபோலா நோய் பரவல் பிரித்தானியா வரை செல்லக்கூடும் என ஆப்பிரிக்காவின் முக்கிய சுகாதார அதிகாரிகளில் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த மேமாதம் முதல் பரவி வரும் இந்த தொற்றால் இதுவரை 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஏறக்குறைய 5,000 பேர் உயிரிழந்துள்ளனர். அரிதான, ஆனால் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த காய்ச்சல், கென்யா, நைஜீரியா மற்றும் உகாண்டாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தின் முதன்மை பொது சுகாதார அமைப்பான ‘ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு […]

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 55 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. செய்தி விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி

  • October 29, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 55 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணி சார்பில் பென் டக்கெட் 167 ஓட்டங்களைப் பெற்றார். 387 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி […]

உலகம்

அரபு கட்சியின் வெற்றிக்கு தேர்தல் முறைகேடுகளே காரணம் – நெதன்யாகு குற்றச்சாட்டு

  • October 29, 2026
  • 0 Comments

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் அரபு கட்சிகள் பெற்றுள்ள அபரிமிதமான வெற்றிகளுக்கு, ஓட்டுப்பதிவில் நடந்த முறைகேடுகளே  காரணம் என்று பெஞ்சமின் நெதன்யாகு ஆதாரங்களை முன்வைக்காமல் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அரபு தலைவர்கள் முற்றிலுமாக மறுத்ததுடன், நெதன்யாகு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அரபு வாக்காளர்கள் பெருமளவில் பங்கேற்றனர். இது நெதன்யாகுவுக்கோ அல்லது அவரது முக்கிய யூத அரசியல் போட்டியாளர்களுக்கோ எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை  கேள்விக்குள்ளாக்கியது. இந்தச் […]

ஐரோப்பா

ரயில் விபத்து – ஸ்பெயினில் மூன்றுநாள் துக்க தினம் அனுசரிப்பு

  • October 29, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மூன்றுநாள்   தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் இந்தத் துக்க காலத்தை அறிவித்துள்ளார். ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் நேற்று இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்டதில், 68 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு ஸ்பெயினில் நடந்த இரண்டாவது மிக மோசமான ரயில் விபத்து […]