ஐரோப்பா

பிரித்தானியாவின் கடலடி கேபிள்களை தாக்க உளவு பார்க்கும் ரஷ்யா

  • October 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முக்கியமான கடலடி கேபிள் வலையமைப்பை உளவு பார்க்கவும், வரைபடமாக்கவும் ரஷ்யா வர்த்தக மீன்பிடி இழுவைப் படகுகளைப் பயன்படுத்துகிறது என்று பகுப்பாய்வு காட்டுகிறது. ரஷ்ய இழுவைப் படகுகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக கேபிள்களுக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டோ அல்லது அவற்றைப் பின்தொடர்ந்து கொண்டோ இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறான 500 இற்கும் மேற்பட்டசம்பவங்களை கப்பல் கண்காணிப்பு தரவு வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடலடி கேபிள்களைச் செயலிழக்கச் செய்வதற்காக நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில், ஆர்க்டிக் கடற்பரப்பில் ரஷ்யா நடத்திய […]

ஐரோப்பா

பிரித்தானியாவை தாக்கும் ஆஸ்டன்புயல் – கனமழை தொடர்பில் எச்சரிக்கை

  • October 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நாளை மற்றும் வார இறுதி நாட்களில் ஆஸ்டன் புயல் தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயலானது மணிக்கு 80 மைல் வேகத்தில் கடுமையான காற்றையும், கனமழையையும் கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் காற்றுக்கான ஆரஞ்சு நிற வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதேநேரம் இன்று நள்ளிரவு முதல் நாளை (23.10) பிற்பகல் வரை தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காற்றுக்கான  மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்காட்லாந்தின் சில பகுதிகளுக்கு […]

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. செய்தி விளையாட்டு

இறுதி ஓவர்வரை பரபரப்பு: இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

  • October 22, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 என்ற இமாலய ஓட்ட இலக்கை விரட்டியடித்து இலங்கை அணி இந்த சாதனை வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 130 ஓட்டங்களையும், தசுன் சானக்க , அவிஸ்க பெர்ணான்டோ ஆகியோர் தலா 97 ஓட்டங்கள் வீதம் பெற்றனர். ஜனித் லியகனே 61 ஓட்டங்களைப் பெற்றார். இவர்களின் அதிரடியே இலங்கையின் வெற்றிக்கு […]

ஐரோப்பா

 டெவன் கடற்கரைக்கு அப்பால் 02ஆம் உலகப்போர் கால கப்பல் கண்டுபிடிப்பு

  • October 22, 2026
  • 0 Comments

டெவன் கடற்கரைக்கு அப்பால் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட  U-boat, U-672இன் உடைந்த பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூழ்காளரான டொமினிக் ராபின்சன் Dominic Robinson குறித்த கப்பலில் ஆரம்பகால ஷ்னோர்செல் அமைப்பு மற்றும் ஜெர்மன் அஃப்ரோடைட் ரேடார் ஏமாற்று உபகரணங்களின் எச்சங்கள்” உள்ளிட்ட கவர்ச்சிகரமான அம்சங்கள் இருந்ததாகக் கூறினார். இந்தகப்பல் 1944 ஆம் ஆண்டு ஜுலை கடலில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும் கப்பலில் பணியாற்றிய 54 மாலுமிகள் உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம் முக்கிய செய்திகள்

185 மைல் வேகத்தில் நகரும் சாம்பி புயல் – ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை

  • October 22, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் மிக வலிமையான புயலான சாம்பி புயல்   Typhoon Champi மணிக்கு 185 மைல் வேகத்தில் தைவான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருகிறது. இந்நிலையில் தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யும் எனவும், தைவான் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை […]

ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் புரட்சி Citizens Revolution கட்சியின் தலைவருமான லூசா கொன்சாலேஸ் (Luisa Gonzalez) கைது செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின்பிரமுகரான காப்ரியேலா ரிவாடெனீரா (Gabriela Rivadeneira) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கைது

  • October 22, 2026
  • 0 Comments

ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் புரட்சி Citizens Revolution கட்சியின் தலைவருமான லூசா கொன்சாலேஸ் (Luisa Gonzalez) கைது செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின்பிரமுகரான காப்ரியேலா ரிவாடெனீரா (Gabriela Rivadeneira) தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரபேல் கொரியாவின் (Rafael Correa) கூட்டாளியான கொன்சாலேஸ், அரசியல் நிதி மற்றும் தேர்தல் பிரச்சாரச் செலவுகளில் முறைகேடுகள் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். தனது கட்சி 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரச் செலவு விவரங்களை தேர்தல் […]

உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – பெரும்பான்மையை இழக்கும் ஆளும் கட்சி

  • October 22, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய நாடாடுளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி  கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது சாத்தியமில்லை என கருத்து கணிப்பொன்று தெரிவித்துள்ளது. அகாம் லேப்ஸ் நிறுவனம் 4,000 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி நெதன்யாகுவின் லிகுட் கட்சியை உள்ளடக்கிய வலதுசாரி ஹரேடி கூட்டணி, 52 முதல் 54 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, நெசெட்டில் Knesset  பெரும்பான்மை பெறத் தேவையான 61 இடங்களை விடக் குறைவாகும். காடி ஐசன்கோட்  […]

ஐரோப்பா

சகோதரருடனான உறவைச் சரிசெய்ய விரும் ஹாரி – விடாப்பிடியாய் நிற்கும் வில்லியம்

  • October 22, 2026
  • 0 Comments

இளவரசர் ஹாரி தனது சகோதரர் இளவரசர் வில்லியமுடனான உறவைச் சரிசெய்ய விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், வில்லியம் அவருடன் சமரசம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. ‘GQ’ இதழுக்கு ஹாரி அளித்த பேட்டியில், தான் மீண்டும் பிரித்தானியா  திரும்பியதற்கு, தனது குடும்பத்தினருக்கு அருகில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கிடையேயான நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமே  காரணம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பில்  இளவரசர் வில்லியமுக்கு நெருக்கமான வட்டாரங்கள், ஹாரி தம்மையும் அரச குடும்பத்தின் […]

உலகம் செய்தி

காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேல் – நால்வர் உயிரிழப்பு

  • October 22, 2026
  • 0 Comments

காசாவில் இன்று இடம்பெற்ற தனித்தனி தாக்குதல் சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா நகரில், ஒரு கார் மீதான தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த மற்றொரு தாக்குதலில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், வடக்கில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமுக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் […]

இலங்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • October 22, 2026
  • 0 Comments

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதியில் நாளைய தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வுத்துறை சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கமைய குறைந்த காற்றழுத்தப் பகுதி மெல்ல வலுப்பெறும் எனவும், இதனால் 10 முதல் 20 டிகிரி வடக்கு அட்சரேகைகள் மற்றும் 80 முதல் 95 டிகிரி கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதிகளில் மீன்பிடித்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]