ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் கைது
ஈக்குவடாரின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், மக்கள் புரட்சி Citizens Revolution கட்சியின் தலைவருமான லூசா கொன்சாலேஸ் (Luisa Gonzalez) கைது செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சியின்பிரமுகரான காப்ரியேலா ரிவாடெனீரா (Gabriela Rivadeneira) தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரபேல் கொரியாவின் (Rafael Correa) கூட்டாளியான கொன்சாலேஸ், அரசியல் நிதி மற்றும் தேர்தல் பிரச்சாரச் செலவுகளில் முறைகேடுகள் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
தனது கட்சி 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரச் செலவு விவரங்களை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், தற்போதைய குற்றச்சாட்டுகளை ஆதரிப்பதற்கு வழக்குத் தொடுநர் அலுவலகத்திடம் (Prosecutor’s Office) எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் முன்பு தெரிவித்திருந்தார்.
தற்போதைய ஜனாதிபதி டேனியல் நோபோவாவுக்கு (Daniel Noboa) எதிரான முன்கூட்டிய (Snap) ஜனாதிபதி
தேர்தலில் கொன்சாலேஸ் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அவர்கள் லூசா கொன்சாலேஸைக் கைது செய்துள்ளனர். இது போதும், இனியும் பொறுக்க முடியாது!” என்று Gabriela Rivadeneira எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.




