ஐரோப்பா

சகோதரருடனான உறவைச் சரிசெய்ய விரும் ஹாரி – விடாப்பிடியாய் நிற்கும் வில்லியம்

இளவரசர் ஹாரி தனது சகோதரர் இளவரசர் வில்லியமுடனான உறவைச் சரிசெய்ய விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், வில்லியம் அவருடன் சமரசம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.

‘GQ’ இதழுக்கு ஹாரி அளித்த பேட்டியில், தான் மீண்டும் பிரித்தானியா  திரும்பியதற்கு, தனது குடும்பத்தினருக்கு அருகில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கிடையேயான நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமே  காரணம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில்  இளவரசர் வில்லியமுக்கு நெருக்கமான வட்டாரங்கள், ஹாரி தம்மையும் அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களையும் குறித்து பொதுவெளியில் தெரிவித்த கருத்துகளால் வில்லியம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே தமது தந்தை மற்றும் சகோதரருடனான உறவு முறிந்ததற்காகத் தான் வருந்துவதாகக் குறிப்பிட்ட இளவரசர் ஹாரி, கடந்த கால மனக்கசப்புகளை மறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஹாரியின் இந்த கருத்துக்கள் பொதுவான சூழலில் கூறப்பட்டவை என்றும், அவை தனது குடும்பத்தினரைத் தாக்குவதற்காகச் சொல்லப்பட்டவை அல்ல என்றும் அவரின் செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்