“மகா சங்கத்தினரை வெகுவிரைவில் கொழும்பில் அணிதிரள வைப்போம். அதற்கு முன்னதாக ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அரசாங்கத்தை விரட்டுவதற்கான போராட்டம் ஆரம்பமாகும்” என்று பலாங்கொட கஸ்ஸப தேரர் சூளுரைத்துள்ளார். இலங்கை செய்தி

மகாசங்கத்தினரை அணிதிரட்டுவோம்: அநுர அரசுக்கு எச்சரிக்கை

  • October 23, 2026
  • 0 Comments

“மகா சங்கத்தினரை வெகுவிரைவில் கொழும்பில் அணிதிரள வைப்போம். அதற்கு முன்னதாக ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அரசாங்கத்தை விரட்டுவதற்கான போராட்டம் ஆரம்பமாகும்” என்று பலாங்கொட கஸ்ஸப தேரர் சூளுரைத்துள்ளார். விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “வன்முறையைத் தூண்டிவிட்டுப் பிக்குகளின் போராட்டத்தை ஒடுக்கலாம் என இந்த அரசாங்கம் கருதுமானால், அது ஒருபோதும் நடக்காது. ஜனாதிபதிக்கு எங்களால் […]

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோனுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

வடக்கு ஆளுநருடன் யாழ்.கட்டளைத் தளபதி சந்திப்பு

  • October 23, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண மாவட்டத்தின் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோனுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று (23.10.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. ஆளுநர் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில், மேஜர் ஜெனரல் வீரக்கோன் அங்கு பணியாற்றியிருந்தார். அக்காலப்பகுதியில் இருவரும் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை இச்சந்திப்பின்போது நினைவுகூர்ந்தனர்.

நாக்பூரைச் சேர்ந்த 'சோலார் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'நாகஸ்திரா-2' (Nagastra-2) எனும் பீரங்கி எதிர்ப்பு வெடிமருந்து அமைப்புகளை (Anti-tank loiter munitions) இந்திய ராணுவத்திற்கு வழங்கி வருகிறது. இந்தியா செய்தி

இந்திய ராணுவத்திடம் ‘நாகஸ்திரா-2’ ஒப்படைப்பு

  • October 23, 2026
  • 0 Comments

நாக்பூரைச் சேர்ந்த ‘சோலார் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘நாகஸ்திரா-2’ (Nagastra-2) எனும் பீரங்கி எதிர்ப்பு வெடிமருந்து அமைப்புகளை (Anti-tank loiter munitions) இந்திய ராணுவத்திற்கு வழங்கி வருகிறது. இந்த ‘நாகஸ்திரா-2’ கருவியானது பகல் மற்றும் இரவு நேரப் பயன்பாட்டிற்கான கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 4 கிலோ எடையுள்ள இரட்டை வெடிமருந்துத் தொகுதியுடன் (tandem shaped-charge warhead) வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கருவி, recover and reuse mode முறையில் 25 கி.மீ தூரம் இயங்கும் திறன்கொண்டது. […]

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை செய்தி

செம்மணியில் இருந்து மீட்கப்பட்ட ஆணிகளும் உலோகங்களும் சவப்பெட்டிகளுக்குரியவையா?

  • October 23, 2026
  • 0 Comments

செம்மணிப் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட ஆணிகள், உலோகங்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் சவப் பெட்டிகளில் இருந்து பிரிகையடைந்த கூறுகளாக இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளார். செம்மணிப் புதைகுழி தொடர்பில் அவர் முன்வைத்துள்ள தடயவியல் பகுப்பாய்வு அறிக்கையின் ஒரு பகுதியில் உள்ள விடயங்களின் சாரம்சமாவது:- “செம்மணிப் புதைகுழி அகழாய்வின்போது உடற்கூறியல் தொடர்பிழந்த பல என்புக் குவியல்கள் இருந்தன. அந்த என்புக் குவியல்களுடன் ஆணிகள், உலோகத் துண்டுகள் என்பனவும் மீட்கப்பட்டன. இவை முன்னர் சவப்பெட்டிகளைக் கொண்டிருந்த புதைகட்டமைப்புகளுடன் […]

"செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம். அரசியல் இலங்கை செய்தி

செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்

  • October 23, 2026
  • 0 Comments

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம். ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகின்றோம்.” – இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற […]

இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபமேற்றுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா செய்தி

இஸ்ரேல் சுதந்திர தினத்தில் பங்கேற்று தீபமேற்றுமாறு மோடிக்கு அழைப்பு

  • October 23, 2026
  • 0 Comments

இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபமேற்றுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், இந்திய விமானி ஸ்மித் மச்சாரையும் கவுரவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் வீரத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பலமுறை பாராட்டி பேசியிருந்தார். இந்தச் சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் […]

சீனாவின் தென்மேற்குப் பகுதியான திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

திபெத் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு – 32 பேர் காயம்

  • October 23, 2026
  • 0 Comments

சீனாவின் தென்மேற்குப் பகுதியான திபெத் தன்னாட்சிப் பகுதியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. திபெத்தின் நாகு நகரத்தில் உள்ள பாகென் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு 10:33 மணியளவில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக சீன நிலநடுக்க வலைப்பமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் […]

ஐரோப்பா

பிரெஞ்சு போராட்டங்கள் – ட்ரம்பின் கருத்துக்கு மக்ரோன் பதிலடி

  • October 22, 2026
  • 0 Comments

பிரான்சில் பரவிவரும் கலவரங்கள் குறித்து அமெரிக்கா முன்வைத்த விமர்சனங்களுக்கு, பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் இன்று பதிலடி கொடுத்துள்ளது. பிரான்ஸில் தற்போது அதிகரித்து வரும் கலவரங்களுக்கு குடியேறிகளே காரணம் என்றும் அந்நாடு விரைவில் முஸ்லிம் நாடாக மாறும் எனவும் ட்ரம்ப் விமர்சித்திருந்தார். இதற்கிடையே பிரான்சில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது, ​​முகமூடி அணிந்த ஆண்கள் ஒரு பெரிய தீக்கு முன்னால் நிற்கும் காணொளியை ICE அமைப்பு பகிர்ந்து, “அமெரிக்கத் தெருக்கள் இப்படிக் காட்சியளிப்பதைத் தடுக்க நாங்கள் ஒவ்வொரு நாளும் போராடுகிறோம்” […]

உலகம்

சீனாவின் கடல்சார் செயற்பாடுகள் அதிகரிப்பு – பாதுகாப்பு அச்சத்தில் 03 நாடுகள்

  • October 22, 2026
  • 0 Comments

தைவான், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு ஜப்பானிய நிபுணரை மேற்கோள் காட்டி தைவானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானின் கிழக்குக் கடற்பரப்பில் தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பெய்ஜிங் ஆட்சியின் உண்மையான நோக்கங்களைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு இந்த மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அந்த […]

உலகம்

சீனாவில் 07 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

  • October 22, 2026
  • 0 Comments

சீனாவில் உள்ள திபெத்தியப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவானதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி வடக்கு திபெத்தில் உள்ள நகு பகுதியில், தரைக்குக் கீழே சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024-க்குப் பிறகு சீனாவைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் நில அதிர்வுகளைத் தெளிவாக உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]