இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – பெரும்பான்மையை இழக்கும் ஆளும் கட்சி
இஸ்ரேலிய நாடாடுளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது சாத்தியமில்லை என கருத்து கணிப்பொன்று தெரிவித்துள்ளது.
அகாம் லேப்ஸ் நிறுவனம் 4,000 வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி நெதன்யாகுவின் லிகுட் கட்சியை உள்ளடக்கிய வலதுசாரி ஹரேடி கூட்டணி, 52 முதல் 54 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது, நெசெட்டில் Knesset பெரும்பான்மை பெறத் தேவையான 61 இடங்களை விடக் குறைவாகும்.
காடி ஐசன்கோட் Gadi Eisenkot தலைமையிலான எதிர்க்கட்சியான யஷார் Yashar , தனிப்பட்ட முறையில் அதிகபட்சமாக 20 இடங்களைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக தாராளவாதக் கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
எந்தவொரு பிரதான கூட்டணியும் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லாததால், ஒரு ஐக்கிய அரசாங்கம், அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மாற்று கூட்டணி அல்லது மறுதேர்தல் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




