இறுதி ஓவர்வரை பரபரப்பு: இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 என்ற இமாலய ஓட்ட இலக்கை விரட்டியடித்து இலங்கை அணி இந்த சாதனை வெற்றியை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 130 ஓட்டங்களையும், தசுன் சானக்க , அவிஸ்க பெர்ணான்டோ ஆகியோர் தலா 97 ஓட்டங்கள் வீதம் பெற்றனர்.
ஜனித் லியகனே 61 ஓட்டங்களைப் பெற்றார். இவர்களின் அதிரடியே இலங்கையின் வெற்றிக்கு வழி வகுத்தது. இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைக் குவித்தது.
இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி புரூக் அதிரடியாக 202 ஓட்டங்களைக் குவித்து, ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
மேலும், 114 பந்துகளில் 200 ஓட்டங்களை எட்டியதன் மூலம், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிவேக இரட்டைச் சதமடித்த வீரர் என்ற உலகச் சாதனையையும் புரூக் படைத்துள்ளார்.
கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவின் சுப்மன் கில 117 பந்துகளில் இரட்டைச் சதமடித்ததே இதுவரை அதிவேக சாதனையாக இருந்தது.




