பிரித்தானியாவின் கடலடி கேபிள்களை தாக்க உளவு பார்க்கும் ரஷ்யா
பிரித்தானியாவின் முக்கியமான கடலடி கேபிள் வலையமைப்பை உளவு பார்க்கவும், வரைபடமாக்கவும் ரஷ்யா வர்த்தக மீன்பிடி இழுவைப் படகுகளைப் பயன்படுத்துகிறது என்று பகுப்பாய்வு காட்டுகிறது.
ரஷ்ய இழுவைப் படகுகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக கேபிள்களுக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டோ அல்லது அவற்றைப் பின்தொடர்ந்து கொண்டோ இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறான 500 இற்கும் மேற்பட்டசம்பவங்களை கப்பல் கண்காணிப்பு தரவு வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடலடி கேபிள்களைச் செயலிழக்கச் செய்வதற்காக நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில், ஆர்க்டிக் கடற்பரப்பில் ரஷ்யா நடத்திய இரகசியப் பயிற்சிகளை நேட்டோ படையினர் சமீபத்தில் இடைமறித்திருந்தனர்.
இந்நிலையில் கேபிள் நாசவேலை செய்பவர்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை மற்றும் வரம்பற்ற அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த பிரிட்டன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பிரிட்டனின் கடலடி உள்கட்டமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்த, கூடுதலாக 330 மில்லியன் பவுண்டுகள் நிதியை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.




