ஐரோப்பா

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்தது கிரீஸ்

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்தை கிரீஸ் அரசாங்கம் இன்று நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தடை ஜனவரி 1, 2027 முதல் அமுலுக்கு வருகிறது.

பயனர்களின் வயதைச் சரிபார்த்து, அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியைக் கண்டறிய சமூக ஊடகத் தளங்களுக்கு இரண்டரை மாதங்கள் அவகாசம் உள்ளதாக கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகீஸ் Kyriakos Mitsotakis  தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் தூக்கம், கவனம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைப் பறிக்கும் “முடிவில்லாத ஸ்க்ரோலிங்” பழக்கத்தைக் கட்டுப்படுத்த பெற்றோருக்கு ஆதரவாக நிற்பதாக கிரீஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை இயற்றிய முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் இந்த சட்டத்தை இயற்றியது. ஆனால் அந்நாட்டின் அரசியலமைப்பு சபையால் இந்த சட்டம் இரத்து செய்யப்பட்டது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்