உலகம்

ட்ரம்ப் – கிம் சந்திப்பிற்கு வாய்ப்பில்லை : உயர்மட்ட அதிகாரிகள் தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு இடையே 2026-ஆம் ஆண்டில் சந்திப்பு நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக, இந்த விவகாரம் குறித்து நன்கறிந்த  ஐந்து நபர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப், வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வடகொரியா மறுத்து வருகிறது.  இந்நிலையில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இழுபறியாக உள்ளது.

ட்ரம்ப்-கிம் சந்திப்பை நடத்துவது குறித்து வடகொரியாவிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று அந்த ஐந்து நபர்களும் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் அமெரிக்க மற்றும் தென் கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகளிடமிருந்து இது குறித்த தகவல்களைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள பிராந்திய உச்சிமாநாட்டின் போது இச்சந்திப்பு நிகழ வாய்ப்பிருந்தாலும், அதற்கான கால அவகாசம் மிகக் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்