ஐரோப்பா

விசா விதிகளை கடுமையாக்கும் நியூசிலாந்து – மாணவர் விசாவிற்கு கட்டுப்பாடு

உலகின் பல வளர்ந்த நாடுகள் தற்போது குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்தவகையில் நியூசிலாந்து அரசாங்கம் இன்று (27) முதல் மாணவர் விசா விதிகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது.

இதன் கீழ், ஆராய்ச்சி அடிப்படையிலான முதுகலைப் பட்டங்களுக்காக நியூசிலாந்துக்கு வரும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட வரம்பற்ற வேலைவாய்ப்பு உரிமைகள் நீக்கப்பட்டு, வாரத்திற்கு 25 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்களின் ஆங்கில மொழித் தகுதிகளும் கடுமையாகக் கருத்தில் கொள்ளப்படும் என்றும், மாணவர் விசாக்களை இடைநிறுத்தம் செய்ய குடியேற்ற அதிகாரிகளுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்