உலகம்

துருக்கி-லிபியா கடல்சார் ஒப்பந்தம் – கிரீஸ் உள்ளிட்ட 04 நாடுகள் கண்டனம்

துருக்கி-லிபியா கடல்சார் ஒப்பந்தம் பிராந்தியப் பாதுகாப்புக்கும் சர்வதேச சட்ட ஒழுங்கிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கிரீஸுடன் இணைந்து கண்டனம் வெளியிட்டுள்ளன.

லிபிய நாடாளுமன்ற கடந்த வாரத்தில் துருக்கியுடனான கடல் எல்லைகள் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இந்நடவடிக்கைக்கு கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் உடனடியாக இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

அத்துடன்   ஐக்கிய நாடுகள் சபையில் கிரீஸ் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் George Gerapetritis கூட்டறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளார்.

அவ் அறிக்கையில்,  கிரீஸும் மூன்று அரபு நாடுகளும், இந்த கடல்சார் ஒப்பந்தம் “பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கடுமையான கவலைகளை” எழுப்புவதாகவும், “தன்னிச்சையான இருதரப்பு ஏற்பாடுகள்” சர்வதேச சட்டத்தின் நிறுவப்பட்ட விதிகளைச் சீர்குலைக்க அனுமதிப்பதன் மூலம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்