ஐரோப்பா

இத்தாலி பிரதமர் மெலோனியின் மின்னஞ்சலை குறிவைத்து சைபர் தாக்குதல்?

சமீபத்திய நாட்களில் இத்தாலியின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலில், பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் மின்னஞ்சல் கணக்கும் குறிவைக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தற்போது தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  எந்தப் பாதுகாப்பு அவசரநிலையும் ஏற்படவில்லை என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத் தகவல்தொடர்புகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் அவருடைய நாடாளுமன்ற மின்னஞ்சல் அல்ல என்று மெலோனியின் அலுவலகம் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதல், பிரதிநிதிகள் சபையில் உள்ள மற்ற சட்டமியற்றுபவர்களையும் பிற நிறுவனங்களையும் குறிவைத்ததாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.ஷ

சமீபத்திய ஆண்டுகளில் இத்தாலி மற்றும் ஐரோப்பா முழுவதும் இணையவழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்