ஐரோப்பா

சுவிஸில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாரிய தீவிபத்து

  • August 21, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் 05 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 19 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் தூரக் கிழக்கில் உள்ள துசிஸ் என்ற இடத்தில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக அவசரக்கால பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

போரினால் பின்லாந்தை ஊடுருவும் விமானங்கள் – உளவுத்துறை எச்சரிக்கை

  • August 21, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியை ஊடுருவியிருக்கலாம் என பின்லாந்து அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வான்வெளி மீறல் எனச் சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு செயலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது,” என்று பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் Antti Hakkanen தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பின்லாந்தில், இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் நடந்துள்ளன. மே மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் பின்லாந்து […]

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office) எச்சரித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வரலாற்றிலேயே மிகக் கடுமையான எல் நினோ: பிரித்தானிய வானிலை மையம் எச்சரிக்கை

  • August 21, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) நிகழ்வு, மனித நினைவில் வாழும் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதாக இருக்கக்கூடும் எனப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் (UK Met Office) எச்சரித்துள்ளது. இயற்கையாக நிகழும் இந்த சக்திவாய்ந்த பருவநிலை நிகழ்வு, உலகளாவிய வெப்பநிலையை உயர்த்துவதுடன் தீவிர வானிலை மாற்றங்களின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யக்கூடியது. மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் இதுவும் சேரும்போது, வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக 2027 […]

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அரசியல் இந்தியா செய்தி

தவெக அரசு வழங்கும் கார்களை நிராகரித்த திமுக எம்எல்ஏக்கள்

  • August 21, 2026
  • 0 Comments

“தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் கூறி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் திமுகவை சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “ அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் எம்எல்ஏக்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு, பொருளாதாரத்தில் நலிவடைந்த […]

புலம்பெயர் தமிழர்கள் அச்சமின்றி தாயகம் திரும்பலாம்: கனடா தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு இலங்கை செய்தி

புலம்பெயர் தமிழர்கள் அச்சமின்றி தாயகம் திரும்பலாம்: கனடா தூதுவரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

  • August 21, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசு போதியளவு நிதியை ஒதுக்கிச் செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதுடன், தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் தெரிவித்தார். வடக்கு […]

வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்பின் சலுகையை நிராகரித்த வடகொரியா: ஏவுகணைகளைச் சோதித்து அதிரடி

  • August 21, 2026
  • 0 Comments

வடகொரியாவிற்கு இணக்கமான போக்கை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவங்கள் தங்களின் வருடாந்திரக் கூட்டுப் பயிற்சியை திட்டமிட்ட நாளுக்கு ஆறு நாட்களுக்கு முன்பாகவே வெள்ளிக்கிழமை நிறைவு செய்துள்ளன. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு இந்நடவடிக்கை போதுமானதாக இல்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. முன்னதாக, Ulchi Freedom Shield என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்குவதற்கு சற்று முன்பாக, பயிற்சியின் அளவை “குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த நாடு கடத்தல் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நாடு கடத்தலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா: 2,300 மெக்சிகோ பிரஜைகள் வெளியேற்றம்

  • August 21, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த நாடு கடத்தல் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இதன்படி, அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் மெக்சிகோ குடிமக்களை நேரடியாக மெக்சிகோவிற்கு அனுப்பாமல், குவாத்தமாலா மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா நாடு கடத்தி வருவதாக அதிகாரப்பூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 2,300 மெக்சிகோ நாட்டவர்கள் குவாத்தமாலாவுக்கும், பல டஜன் கணக்கிலானோர் ஹொண்டுராஸுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். வழக்கமாக அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் மெக்சிகோ குடிமக்கள் […]

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். இந்தியா செய்தி

தமிழகத்துக்காகவே மேகேதாட்டு அணை கட்டுகிறோம்: கர்​நாடக முதல்​வர்

  • August 21, 2026
  • 0 Comments

“மேகே​தாட்டு அணை கர்​நாடகா​வுக்​காக அல்ல, தமி​ழ​கம் மற்​றும் புதுச்​சேரி​யின் பயன்​பாட்​டுக்​காகவே கட்​டப்​பட​வுள்​ளது” என கர்​நாடக முதல்​வர் டி.கே சிவக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். கோவளத்​தில் நேற்று நடை​பெற்ற தென்​மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்​கேற்று உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் 33 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக தென்மாநிலங்கள் பங்​களிக்​கின்​றன. இதில் கர்​நாட​கா, நாட்​டின் மென்​பொருள் ஏற்​றும​தி​யில் 42 சதவீதத்​தை​யும், விமானத் துறை​யில் 60 சதவீதத்​தை​யும் அளிக்​கிறது. இருப்​பினும், 15-வது நிதி​யமைப்​பில் கர்​நாடகா​வுக்​கான நிதிப் பகிர்வு […]

உலகம்

இம்ரான் கான் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றம்

  • August 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மருத்துவ சிகிச்சைக்காக அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன, மேலும் இஸ்லாமாபாத் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளும் வைத்தியசாலையில் குழுமியுள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் ஃபைசல் மற்றும் டாக்டர் உஸ்மா ஆகியோரும் அடியாலா சிறைக்கு வந்தடைந்தனர். மருத்துவமனைக்கு கான் மாற்றப்படும்போது, ​​இந்த இரண்டு மருத்துவர்களும் அவருடன் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச […]

இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும் இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையை தக்கவைக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தடையாக அமையுமா?

  • August 21, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து முதல் 24 மணிநேரத்திற்குள், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. […]