“அவள் எனக்குச் சொந்தமானாள்” – ஹர்திக் பாண்டியாவிற்கு நிச்சயதார்த்தம்
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா, தனது காதலியான மஹீகா சர்மாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இறுதியாக அவள் எனக்குச் சொந்தமானாள்” (Finally she’s mine) எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவும் மஹீகா சர்மாவும் தங்களது காதல் உறவு தொடர்பில் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அவர்களுக்கு இரகசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




