07 வயது மகனை பறிதவிக்க விட்டுவிட்டு மலையேற்றத்தில் ஈடுபட்ட தந்தை
ஜப்பானில் தனது மகன்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த தந்தையொருவர் தனது இரண்டாவது மகனை தனியே விட்டுச் சென்ற சம்பவம் பேசுப்பொருளாகியுள்ளது.
மலையேற்றம் செய்ய முடியாத அளவுக்கு மிகவும் சோர்வடைந்த ஏழு வயது சிறுவன் ஒருவனை, அவனது 48 வயது தந்தை ஃபூஜி மலையில் தனியாக விட்டுச் சென்றுள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,490 மீட்டர் உயரத்தில் உள்ள ஆறாவது நிலையத்தில் குறித்த சிறுவன் தனியாக காத்திருந்ததாகவும், பின்னர் அங்கிருந்த நபர் ஒருவர் சிறுவனுக்கு அடைகளம் கொடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தந்தையை கண்டுப்பிடித்ததுடன், மகனை அழைத்துவருமாறு உத்தரவிட்டுள்ளனர்.
ஒரு குழந்தையைத் தனியாக விட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறி, ஜப்பானிய பொலிஸார் தந்தையைக் கண்டித்துள்ளனர்.
மேலும், தந்தை தனது செயல்களுக்காக “மிகவும் வருந்துவதாக”க் கூறியதாகவும் கூறப்படுகிறது.




