ஐரோப்பா

ரஷ்யாவுடன் அதிகரிக்கும் பதற்றம் : எல்லையை 06 மாதங்களுக்கு மூடும் எஸ்டோனியா 

ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த எஸ்டோனியா தனது வான்வெளியை உக்ரைனுக்கு வழங்கியதாக மொஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.

இருப்பினும் எஸ்டோனியா இந்த குற்றாச்சாட்டை மறுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம், தனது நிலப்பரப்பை மற்றொரு நாடு இராணுவ நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த “ஒருபோதும் அனுமதித்ததில்லை, இனியும் அனுமதிக்காது” என்று  கூறியுள்ளது.

இதற்கிடையே ரஷ்யாவுடனான எல்லையை வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு மூடவுள்ளதாக அநாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே எல்லைப் பகுதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரம் இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்