உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ராஜினாமா ரத்து: சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் Nvidia CEO ஆகிறார் Jensen Huang

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னணி நிறுவனமான என்விடியாவின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் Jensen Huang மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னணி நிறுவனமான என்விடியாவின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் Jensen Huang மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் அவர் பதவி விலகும் முடிவை எடுத்திருந்தார்.

சீனாவுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகித்த பெண் ஒருவருடன் இவர் தொடர்பில் இருந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

எனினும், உளவு குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ள நிலையில், ஜென்சன் ஹுவாங்கின் நேர்மையான அணுகுமுறை மற்றும் நிறுவனத்தை வழிநடத்தும் திறன் குறித்து திருப்தியடைந்துள்ளதாக என்விடியா தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் இணை நிறுவுநரான ஹுவாங், கடந்த சில வாரங்களாக தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக நிறுவனத்தின் நிர்வாகக் குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“என்விடியாவுக்குத் திரும்பி, புதிய தொழில்துறை புரட்சியின் தொடக்கத்தில் உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றை வழிநடத்துவதில் பெருமையடைகிறேன். இந்தப் பொறுப்பை மிகுந்த பணிவுடனும், புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடனும் ஏற்றுக்கொள்கிறேன். மீண்டும் பணிகளைத் தொடங்க ஆவலாக உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஹுவாங் மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வருவதை நிராகரித்திருந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்ற பின்னர், அவரது மீள் நியமனத்தில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என முடிவு செய்ததாக நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி