உலகம்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பெரு நாட்டில், நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், 6.7 ரிக்டர் அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பரினகொச்சேஸ் ( parinacochas ) மாகாணத்தில் உள்ள உபஹசோ ( Upahuacho ) என்ற நகரில் இருந்து 38 கி.மீ தூரத்திலும், 66 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து  ஐகா, ஆர்கியுபா ஆகிய நகரங்களில் பின்னதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து  வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தனர்? மீட்பு பணிகளின் நிலவரம் என்ன? போன்ற விவரங்கள், வெளியாகவில்லை.

இதேவேளை இதற்கு முன்பு, கடந்த 2007-ஆம் ஆண்டு, 7.9 என்ற ரிக்டர் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்