உலகம்

நைஜீரியாவை அச்சுறுத்தும் மனிதக் கடத்தல் – ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

  • August 25, 2026
  • 0 Comments

நைஜீரியாவில் கடந்த வாரம் ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட மக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு Bola Tinubu இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். வட-மத்திய நைஜர் மாநிலத்தில் மசூதியின் மீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்களாக சுமார் 600 பேரைக் கடத்திச் சென்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்தியில், இது கோழைத்தனமானது எனக் கண்டித்ததுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தது. […]

இந்தியா செய்தி

பிஹாரில் மாணவர் போராட்டம் தீவிரம்

  • August 25, 2026
  • 0 Comments

70 வது பிஹார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (BPSC) தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, தலைநகர் பாட்னாவில் மாணவர்கள் முன்னெடுத்த பேரணியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது பிஹாரிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 70-வது BPSC தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும், அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டும் மாணவர்கள், அந்தத் […]

உலகம்

காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

  • August 25, 2026
  • 0 Comments

காசா பகுதியில் உள்ள குழந்தைகள் பட்டம்விடுவதை தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் தீவிரவாதக் குழு எல்லையைத் தாண்டி தீப்பற்றும் பட்டங்களை வீசும் தந்திரத்தை மீண்டும் தொடங்கினால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசாவில் இடம்பெயர்ந்தோர் முகாம்களையும் தங்குமிடங்களையும் நடத்தும் உள்ளூர் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மக்கள் குழுக்கள்,நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,”நாங்கள் களத்தில் அயராது உழைத்து, […]

காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

OMP நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்

  • August 25, 2026
  • 0 Comments

காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற நிகழ்வைக் கண்டித்தே, வடக்கு – கிழக்கு […]

உலகம்

 மனித தலையீடுகள் இல்லாத தானியங்கி ஆயுதங்கள் குறித்து அவசர எச்சரிக்கை

  • August 25, 2026
  • 0 Comments

எதிர்காலத்தில் மனிதத் தலையீடு இல்லாமல் மக்களைக் கொல்லக்கூடிய தானியங்கி ஆயுதங்கள் விரைவில் மோதல்களில் பயன்படுத்தப்படலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அவசரப் பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இயந்திரங்கள் மூலம் மனிதர்களைத் தானாகவே […]

ஐரோப்பா

ஹாலே விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சி – சூத்திரதாரிகளை பகிரங்கப்படுத்த ஜெர்மன் உறுதி

  • August 25, 2026
  • 0 Comments

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் முயற்சிக்கு யார் பொறுப்பு என்பதை ஜெர்மன் அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் Friedrich Merz இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது அரசாங்கம் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். பாதுகாப்பு வட்டாரங்கள், இந்தத் தாக்குதல் முயற்சியில் ரஷ்ய உளவுத்துறைக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றன. ஆனால் பெர்லின் எந்த நேரடிக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை. பின்னணி கடந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களை தீர்க்க நாசா முயற்சி – தயாராகும் விண்வெளி ஆய்வகம்

  • August 25, 2026
  • 0 Comments

நாசா தனது அடுத்த முதன்மை விண்வெளி ஆய்வகத்தை ஏவுவதற்குத் தயாராகி வருகிறது. விஞ்ஞானிகள் இந்த ஆய்வகத்தைப் பயன்படுத்தி, பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களான கரு ஆற்றல் மற்றும் கருப்பொருள் போன்றவற்றை ஆராயவும், அதே நேரத்தில் பரந்த அளவில் ஈர்ப்பு விசையைச் சோதிக்கவும், நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள கோள்களைத் தேடவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த ஏவுதல் திட்டம் வரும் 30 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள நாசாவின் […]

இலங்கை செய்தி

வடக்கில் முதலீடுகளுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது: அமைச்சர் உத்தரவு

  • August 25, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் முதலீட்டாளர்கள் நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக்கூடாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு தாமதமின்றி உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ‘சன்சக்தி டிரேடர்ஸ்’ (தனியார்) நிறுவனம் முன்னெடுக்கவுள்ள முதலீட்டுத் திட்டம் குறித்து விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் […]

உலகம்

நீண்ட நாட்களுக்கு பின் தாய்லாந்தில் நங்கூரமிடப்படும் ஆபிரகாம் லிங்கன் கப்பல்

  • August 25, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நீண்டகாலம் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், அடுத்த வாரம் தாய்லாந்தில் நங்கூரமிடும் என்று தாய்லாந்து அதிகாரி ஒருவர் இன்று அறிவித்தார். ஆகஸ்ட் 22 அன்று மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்ட  குறித்த கப்பல், 200 நாட்களுக்கும் மேலாக எந்தத் துறைமுகத்திற்கும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடலில் தொடர்ச்சியாக அதிக நாட்கள் இருந்ததற்கான நவீனகால சாதனையாகும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 5000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் […]

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இலங்கை செய்தி

போரால் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நீதி அமைச்சர்

  • August 25, 2026
  • 0 Comments

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2009ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகைகுளம் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, குடும்பத்தினருடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார். […]